Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலாம் நினைவு நாள் - 108 ஆத்திச்சூடியை 3 நிமிடத்தில் கூறி சாதனை செய்த சிறுமி - வீடியோ

கலாம் நினைவு நாள் - 108 ஆத்திச்சூடியை 3 நிமிடத்தில் கூறி சாதனை செய்த சிறுமி - வீடியோ
, வியாழன், 27 ஜூலை 2017 (16:10 IST)
முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தில் அவர் கண்ட சாதனையை பறைசாட்டும் வகையில் இரு குழந்தைகளின் சாதனை நிகழ்ச்சி கரூரில் நடத்தப்பட்டது.


 

 
முன்னாள் மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் இரண்டாவது  நினைவு தினம் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது நினைவு நாளில் குழந்தைகள் சாதனை புரிய கனவு காண வேண்டுமென்ற வகையில் கரூரில் உள்ள தனியார் பள்ளி இரு சாதனைகளை நிகழ்த்தி மழலைச்செல்வங்களை கெளரவித்துள்ளது. 
 
கரூர் சின்னாண்டாங்கோயில் ரோட்டில் உள்ள கிரீன்ஹுட் நர்சரி & பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவி சாதனா (3 வயது), பள்ளியில் நடந்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில் ஒளவையார் கூறிய, 108 ஆத்திச்சூடியை 3 நிமிடம் 32 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்தார். 
 
மேலும் இதே பள்ளி மாணவி இனிதா (4 வயது) என்ற மாணவியும், தமிழ் வருடங்கள் 60 ஐயும், 1 நிமிடம் 3 விநாடிகளில் ஒப்புவித்து சாதனை பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இரு மாணவிகளின் பெயர்களும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு 2017 ன் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனர், முதல்வர் மற்றும் ஆசிரியைகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு அக்குழந்தைகளை பாராட்டி கெளரவித்தனர். மேலும் டாக்டர் அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவரது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்ததாக பொதுமக்களும், பெற்றோர்களும் கூறுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரை ஏமாற்ற இந்த இலவச திட்டம்? லாபம் பார்க்கப்போகும் முகேஷ் அம்பானி; அம்பேலாக போகும் வாடிக்கையாளர்கள்!!