Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாடி பாட்டிலில் வருகிறதா ஆவின் பால்?

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (19:55 IST)
ஆவின் பால் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் கண்ணாடி பாட்டிலில் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது. இதனை அடுத்து பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலுக்கு மாறியுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் மட்டும் இன்னும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்து வருகிறது 
 
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமுல் போன்ற நிறுவனங்கள் தற்போது கண்ணாடி, டெட்ரா பாக்கெட்டுக்களில் விற்பனை செய்து வரும் நிலையில்  ஆவின் நிறுவனம் ஏன் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்
 
இதற்கு தமிழக அரசு தரப்பு விளக்கம் கூறிய போது பிளாஸ்டிக் பாக்கெட்டை தடை செய்ய தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் இதற்கு விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து விரைவில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments