Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை உயர்ந்தது ஆவில் பால் பொருட்கள்: கட்டுபடி ஆகுமா?

Advertiesment
பால் முகவர்கள் சங்கம்
, செவ்வாய், 14 ஜூலை 2020 (17:44 IST)
அரசின் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டகம். 

 
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் பாலாடை கட்டி உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
 
சமீபத்தில் ஐந்து பால் பொருட்களை ஆவின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கக்கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவின் மோர்,  ஆவின் சாக்கலேட் லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
இந்நிலையில் ஆவின் நெய் விற்பனை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.50 வரையிலும், சமையல் வெண்ணெய் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் உயர்ந்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 
எனவே உயர்த்தப்பட்ட நெய் மற்றும் சமையல் வெண்ணை, டீ மேட் பால் போன்றவற்றின் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: நீட், செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசனை