Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!

Advertiesment
விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (10:35 IST)
தற்போது ஆவின் நிறுவனம் நெய் விலையை ஏற்றியுள்ளது, இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகியுள்ளது.


தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பால் தயிர் மட்டுமின்றி புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல அவ்வப்போது சில பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆவின் நெய் விலையை ஏற்றியுள்ளது.

கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய் விலை 3வது முறையாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் விலையை ரூ.50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகியுள்ளது. அதன்படி, 5 லிட்டர் நெய் விலை ரூ.2,900 இருந்து ரூ.3,250 ஆகவும், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.580 இருந்து ரூ.630 ஆகவும், 500 மிலி நெய் ரூ.290 இருந்து ரூ. 315 ஆகவும், 200 மிலி ரூ.130 இருந்து ரூ.145 ஆகவும், 100 மிலி நெய் ரூ.70 இருந்து ரூ.75 ஆகவும் விலை மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐஸ் கிரீம், தயிர், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு குறைந்ததா?