Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன?

ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன?
, வெள்ளி, 7 ஜூலை 2017 (13:51 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் ஜூலியை பற்றி கிண்டலாகவும், கோபமாகவும் பேசி வருவதன் காரணம் இவைதான்  என செய்திகள் உலா வருகிறது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே ஜூலியின் செயல்பாடுகள் காயத்ரி ரகுராம் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு பிடிக்கவில்லை. எப்போதும், ஜூலியை பற்றியே இருவரும் கிண்டலாகவும், கோபமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சில சமயம் ஜுலியிடம் நேரிடையாகவே சண்டையும் போடுகின்றனர். எல்லோரும் ஒரு குடும்பம் போல் என நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசிக் கொண்டாலும், ஜூலி மீதான காழ்ப்புணர்ச்சி ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் நன்றாகவே வெளிப்படுகிறது.
 
நேற்றைய நிகழ்ச்சியில் கூட ‘நீ ஏன் நர்ஸ் வேலையை விட்டு விட்டு ஏன் இங்கே வந்தாய்?’ என ஜூலியிடம் இருவரும் வாக்குவாதம் செய்து அவரை அழ வைத்தனர்.  இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் மத்தியில் ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேவையில்லாமால் ஜூலியை வம்புக்கு இழுக்கிறார்கள் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் சினிமா மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள். ஆனால், ஜல்லிட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. எனவே, அவர் மீது அவர்கள் இருவருக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கலாம்.
 
அடுத்து முக்கியமாக, ஆர்த்தி அதிமுகவை சேர்ந்தவர். தேர்தலின் போது நட்சத்திர பேச்சளராக சென்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருபவர். அதேபோல், காயத்ரி ரகுராம் பாஜகவை சேர்ந்தவர். எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சசிகலா மற்றும் மோடி ஆகியோரை ஜுலி கிண்டலாக விமர்சித்ததால் அவர்கள் இருவருக்கும் ஜூலியின் மீது கோபம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
 
ஆனால், அவர்களின் இந்த செயல்பாடுகள் காரணமாக, இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஜூலிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் இஸ்ரேல் பயணம்: பின்னணியில் 400 கோடி ரூபாய் டீலிங்!!