Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்கும் ஆம் ஆத்மி.. பஞ்சாப், டெல்லியில் சிக்கல்..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (12:00 IST)
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் மூன்று தொகுதிகளையும் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு தொகுதிகளையும் தருவதாக கூறியுள்ளது. 
 
ஆனால் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 15 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் அதே நேரத்தில் குஜராத், ஹரியானா மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அதிக தொகுதிகளை ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.  
 
குறிப்பாக ஹரியானாவில் மொத்தமே 10 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என ஆம் ஆத்மி கேட்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே திமுக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments