மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முதலாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
பொது விநியோக திட்டத்தில் முறைகேடு செய்ததாக அவரது வீட்டில் சுமார் 17 மணி நேரம் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் சில ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் ஆத்யா கைதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.