Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் ஆடிக்கழுவாடி திருவிழா

கரூரில் ஆடிக்கழுவாடி திருவிழா

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (18:04 IST)
கரூர் அருகே ஆடிக்கழுவாடி திருவிழா மற்றும் 1008 பால்குட அபிஷேக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


 


கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், குளிர்ந்தமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கழுவாடி திருவிழா மற்றும் 1008 பால்குட அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

27 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் ஆடிக்கழுவாடி நாளான ஆடி மாதம் 32 ம் நாளை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் 1008 பால்குடம் எடுத்து வேலாயுதம்பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கேரள செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக வந்து, அரிவாள் மீது குருசாமி ஒருவர் ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

அப்பகுதியின் முக்கிய சந்திப்புகளில் அரிவாள் மீது ஏறி நின்று பின்பு அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அடுத்து அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு தீர்த்த குடங்கள் மற்றும் பால்குடங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முனியப்பசுவாமி அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆடிக்கழுவாடி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments