த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (10:42 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகியுள்ள ஆதவ் அர்ஜூனா விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, "உங்களது எதிர்கால திட்டம் என்ன? தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறேனா, அல்லது வேறு கட்சியில் இணைகிறேனா என்பதை விரைவில் அறிவிக்கிறேன்," என்று கூறினார்.

இதனை அடுத்து, அவர் இன்னும் சில நாட்களில் எந்த கட்சியில் இணைவார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments