Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்ற பெண்

ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்ற பெண்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (10:00 IST)
ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்று ரோஸ்லின் என்ற பெண் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களின் மகள் சிதானி (9), மகன் சிரீஸ் (3) இந்த ஆண்டு தான் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இரு வருடங்களுக்கு முன்பு சிவக்குமார் செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை தொடங்கினார். அதை லெட்சுமிபிரபா கவனித்து வந்தார். அந்த கடையில் துரைசாமிபுரத்தை சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி (23) வேலைபார்த்து வந்தார். வேலைக்கு சேர்ந்த் கொஞ்ச நாட்களில், ரோஸ்லின், லெட்சுமிபிரபாவை ஓரினசேர்கைக்கு அழைத்துள்ளார். இதனால் ரோஸ்லினை அவர் வேலையை விட்டு நீக்கினார். 

இந்நிலையில், பாலக்கரை காவல் நிலையத்திற்கு சென்ற ரோஸ்லின், சிறுவன் சிரீசை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். ரோஸ்லினிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லெட்சுமிபிரபா வேலையில் இருந்து நீக்கியதால் அவர் மீது ரோஸ்லினுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும். இதனால் லெட்சுமிபிரபாவை பழிவாங்க அவருடைய மகன் சிரீசை பாழடைந்த ஒரு வீட்டின் அருகே அழைத்து சென்று அவனை துப்பட்டாவால் ரோஸ்லின் கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரோஸ்லினை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments