Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

J.Durai
வியாழன், 16 மே 2024 (20:48 IST)
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து முதுமலை ஒட்டி உள்ள மசினகுடியில்   இருந்து சிங்கார செல்லும் சாலையில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ளதால்  அடிக்கடி வனவிலங்குகள் மசினகுடி பகுதிக்கு வருவது வழக்கம்.
 
கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு ரேஷன் கடையை உடைத்து அரிசி பருப்பு  உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை நாசம் செய்து வீசியது. இதில் கடையின் இரும்பு கதவுகள்  உடைக்கப்பட்டு கடை முற்றிலும் நாசமானது.
 
இதனால் அருகே உள்ள அரைக்கு மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேஷேன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் காட்டு யானை சேதப்படுத்திய  பொருட்கள் மற்றும் கடையை சீரமைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை மீண்டும் உடைத்து கதவுகளை நொறுக்கியது.
 
இதனால் வட்ட வழங்கல் துறையினர் அடுத்தடுத்து காட்டு யானைகள் கடையை உடைத்து வருவதால்  வட்ட வழங்கல் துறையினர்  இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றி யோசித்து வருகின்றனர். 
 
காட்டு யானையின் தொடர் தாக்குதலால் ரேஷேன் கடையை பாதுகாக்க முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாதுகாப்பு கேட்டால் கட்டணம் வசூலிக்கலாம்: சென்னை ஐகோர்ட்

இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் விலை ரூ.66,400..!

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜகவால் வழங்க முடியும்: டி.டி.வி.தினகரன் பேட்டி..!

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலை: பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய்

பெண்களின் பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் நிதி எங்கே? தமிழிசை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments