உல்லாசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவன்: மனைவி செய்த வெறிச்செயல்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (13:53 IST)
ராமநாதபுரத்தில் உல்லாசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராமநாதபுரம் கமுதியையடுத்த ராமசாமிபட்டியை சேர்ந்த ஜெயராஜ். இவரது மனைவி பொன்மணிக்கு கடந்த 3 ஆண்டுகளாக அசோக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஜெயராஜ் அவ்வப்போது வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்லும் நேரத்தில் பொன்மணி அசோக்குடன் உல்லாசமாக இருந்துள்ளார். கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடரமுடியாது என நினைத்த பொன்மணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஜெயராஜை கொல்ல திட்டமிட்டார்.
 
அதன்படி வெளியூர் சென்று வீடு திரும்பிய ஜெயராமை, பொன்மணி தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெயராஜின் உடலை மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பொன்மணி கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அசோக்கையும் பொன்மணியையும் கைது செய்தனர். இச்சம்பவம் கமுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments