Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிக்க பணம் தராததால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை

Advertiesment
குடிக்க பணம் தராததால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை
, ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:24 IST)
நாகையில் குடிக்க பணம் தராததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அந்தகத்துறையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் மனைவியிடம் சண்டையிட்டு பணத்தை வாங்கிச் செல்வான்.
 
அவ்வாறு நேற்றும் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளான். தன்னிடம் பணமில்லை என அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பீரோவை கீழே தள்ளியுள்ளான். இதில் கீழே இருந்த அவனது குழந்தை பாரம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்