மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

Mahendran
வியாழன், 16 மே 2024 (16:01 IST)
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின் படி இன்று முதல் அதாவது மே 16ஆம் தேதி முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீச கூடும் என்றும் அது மட்டும் இன்றி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது 
 
எனவே திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments