Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அறுவை சிகிச்சை
Mahendran
வியாழன், 16 மே 2024 (15:56 IST)
கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு கையின் ஆறாவது விரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 வயது சிறுமிக்கு நாக்கில் அடியில் அதிக சதை இருப்பதை பார்த்த மருத்துவர் அதை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பெற்றோர் ஒப்புதல் இன்றி அவர் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கைவிரலில் அறுவை சிகிச்சையை அவர் முறைப்படி செய்ததாகவும் கூடுதலாக அவர் பெற்றோரிடம் அனுமதி கேட்காமல் நாக்கில்  அறுவை சிகிச்சை செய்ததால் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

இசைஞானி அல்ல உலக இசைமேதை! இளையராஜாவுக்கு கோலாகல வரவேற்பு!

973 வாகனங்கள் ஏலம்.. முழு தகவல்களை வெளியிட்ட சென்னை காவல்துறை..!

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments