திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக அடைப்படை வசதிகள் எதுவும் எங்கள் கிராமத்துக்கு செய்து தரப்படவில்லை என மிட்டகண்டிகை கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
586 வாக்குகளை கொண்ட இந்த கிராமத்தில் வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த கிராம மக்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யததால் தேர்தலை புறக்கணிப்பதாக முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகின்றனர்.