பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனையாகி வருகிறது என்பது தெரிந்ததே
ஆனால் அதே நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில், நேற்று ஒரு தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வாகனத்தில் தீ பற்றுவது போன்று உணர்ந்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார்.
அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப் பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.