33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா பெண் இனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,
‘’பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது.
இந்த மசோதாவை கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்திருப்பது ஓட்டு மொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி’’ என்று தெரிவித்துள்ளார்.