கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பழைய ஐந்து பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பழைய ஐந்து படங்களை தேடிப்பிடித்து எடுத்து வந்து பிரியாணியை வாங்கி சென்றனர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு டி-ஷர்ட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் கூட்டம் அலைமோதியது
பழைய பத்து பைசா நாணயத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேடிப்பிடித்து எடுத்து வந்து டோக்கன் பெற்று டிசர்ட்டை வாங்கி சென்றனர். இந்த டிசர்ட்டை வாங்க கூட்டம் அலைமோதியபோதிலும் முதலில் வந்த 200 பேர்களுக்கு மட்டுமே டிசர்ட்கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் நமது மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தவே இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். பழைய 10 பைசாவுக்கு டீசர்ட் என்ற அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் செல்லாத காசாக நினைத்த பத்து பைசாவை தேடி எடுத்திருப்பார்கள். அப்போது அந்த பத்து பைசாவிற்கு என்னென்னவெல்லாம் வாங்கியிருப்பார்கள் என்ற மலரும் நினைவுகள் ஏற்பட்டிருக்கும். இந்த அனுபவத்தை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம் என்று கூறியுள்ளார்