தொழில் போட்டி: கொடூரமான கொல்லப்பட்ட திருநங்கை

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (09:27 IST)
தூத்துக்குடியில் கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த திருநங்கை தொழில் போட்டி காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி எஸ்.எஸ் மாணிக்கபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற திருநங்கை பூசாரியாக இருந்து வந்தார். இந்த கோவிலை கட்டிய  மூதாட்டியின் பேரன் மருது என்பவர் இந்த கோவிலுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
கோவிலில் கிடைக்கும் வருமானத்திற்கான வரவு செலவு முழுவதையுமே ராசாத்தி கவனித்து வந்தார். இதில் மருதுவிற்கும் ராசாத்திக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் ராசாத்தியை பார்க்க வரும் திருநங்கைகளை மருது வம்பிழுத்து வந்துள்ளான்.
 
இதுபற்று அறிந்த ராசாத்தி, மருதுவை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் அவனின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார்.  கோவிலையும் தன் கையிலிருந்து எடுத்துக்கொண்டு தன்னையே மிரட்டுகிறாள் என கோபமடைந்த மருது,  கூலிப்டையை ஏவி ராசாத்தியை கொலை செய்ய திட்டமிட்டார்.
 
அதன்படி கூலிப்டையினர் ராசாத்தியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதுவை கைது செய்துள்ள போலீஸார் அவனுக்கு உதவிய கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments