Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதியின் கார் மோதிய சிசிடிவி காட்சி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (09:14 IST)
நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென எதிரே வந்த பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது., இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் 44 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சி அடைந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளதோடு, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்து வருகின்றது. மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை செய்த அமைச்சரவை பதில் தாக்குதலுக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டுகளுடன் கூடிய கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கார் மோதிய வேகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடந்த அதிர்ச்சி காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments