Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

Advertiesment
Chennai Lorry Chase

Prasanth Karthick

, செவ்வாய், 20 மே 2025 (15:14 IST)

பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை திருடிச் சென்ற நபர், பிடிக்கச் சென்ற போலீஸையும் லாரியோடு தொங்க விட்டு இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே டாரஸ் லாரி ஒன்றை நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது லாரிக்குள் ஏறிய மர்ம நபர் லாரியை திருடிச் சென்றார். ஓட்டுநர் கத்தவும் லாரியை துரத்தி பிடிக்க முயன்றனர். மேலும் அடுத்து உள்ள சிக்னல்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

 

அதை தொடர்ந்து மகேந்திரா சிட்டி சிக்னலில் பணியில் இருந்த காவலர் முருகன் லாரியை மறிக்க முயன்று அதில் ஏறினார். ஆனால் அவர் வெளியே தொங்கியபடியே இருக்க அந்த ஆசாமி லாரியை வேகமாக செலுத்திக் கொண்டு சென்றுள்ளார். இதனால் காவலர் முருகன் சுமார் 13 கி.மீ தூரத்திற்கு தொங்கியபடியே செல்ல சக போலீஸாரும், பல வாகன ஓட்டிகளும் அந்த லாரியை சேஸ் செய்தனர்.

 

இறுதியாக மறைமலைநகர் சிக்னல் அருகே லாரியை மடக்கி பிடித்த போலீஸார் லாரி திருடனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran!