Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி! – மதுரையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (09:33 IST)
மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது


 
இந்த நிலையில், இன்று இரவு கடையில் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடிகளை கொண்ட இந்த கடையில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டதால்,உள்ளே இருந்த ஊழியர்கள் அவசரவசரமாக வெளியேறினர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மதுரை திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து காரணமாக புகை அதிகளவிற்கு வெளியேறியது 3 மணி நேரம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட  நிலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தின்போது கடைக்குள் 3 ஆவது தளத்தில் கழிவறையில் சிக்கி இருந்த மோதிலால்(45). என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததல், தீயணைப்புத்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறிய நிலையில் உடற்கூராய்விற்காக  உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரையில், மீனாட்சியம்மன் கோவில் அருகே நகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும்,தீ விபத்து குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments