Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய பைக் உடன் ஆசி பெற வந்த மாணவன்..! அறிவுரை கூறி அனுப்பிய பிரேமலதா..!

Advertiesment
premalatha

Senthil Velan

, வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:26 IST)
புதிதாக பைக் வாங்கி தேமுதிக அலுவலகத்திற்கு வந்த மாணவனை ஆசீர்வதித்த, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தினார்.
 
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மதிய உணவு வழங்கினார். அப்போது, புதிய பைக் உடன் தேமுதிக தலைமை கழகத்திற்கு வந்த மாணவன் ஒருவர், தன்னை ஆசிர்வதிக்கும்படி திருமதி பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டுக்கொண்டார். 

 
அப்போது மாணவருக்கு ஆசி வழங்கிய பிரேமலதா, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வாகனம் ஓட்டும்படி மாணவனுக்கு அறிவுறுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ்ய சபை உறுப்பினர் ஆகிறாரா ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர்? காங்கிரஸ் திட்டம்..!