Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு விருந்து வைக்கும் முதல்வர்: கூட்டணி இறுதி செய்யப்படுமா?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (08:06 IST)
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு விருந்து வைக்கும் முதல்வர்
பாஜகவின் முக்கிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவருடைய வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில மாதங்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அமித்ஷாவின் வருகைக்குப்பின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கூட்டணியை உறுதி செய்யவே அமித்ஷா தமிழகம் வருவதாகவும் முதல்வர் மற்றும் அதிமுக தலைவர்களுடன் பேசி கூட்டணியை அவர் உறுதி செய்வதோடு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு சிறப்பான விருந்து தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமித் ஷாவு சப்பாத்தி தால், பெப்பர் பாயா, மட்டன் கோலா உருண்டை குழம்பு, செட்டிநாடு மீன் வறுவல் உள்பட பல மெனுக்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த விருந்தை கொடுத்து அசத்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த விருந்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த விருந்தின்போது இரு கட்சிகளின் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments