சமீபத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்த நிலையில் அந்த அதிகாரிகளின் ஒருவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக குடியிருப்பில் ராமசுப்பிரமணியன் என்பவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு செய்வதற்காக முந்தைய நாள் இரவே ராமசுப்பிரமணியம் அலுவலகம் சென்று விட்டார். இந்த நிலையில் அன்றைய தின இரவில் மர்ம நபர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்று உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆஷா தனது கணவரிடம் கூற ராமசுப்பிரமணியம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையன் பழைய குற்றவாளி ஆனந்த் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொள்ளையன் ஆனந்தை கைது செய்த போலீசார், கொள்ளையனிடமிருந்து நகைகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.