Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை

Advertiesment
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை
, வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:03 IST)
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகளில் சமீபத்தில் சோதனை நடந்தது என்பதும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்து வருவதாகவும் ஒரே நேரத்தில் 4 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய மருத்துவர் செல்வராஜ் என்பவரது மருத்துவமனையிலும் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உதவியாளர் சரவணன் வீடு சென்னை நந்தனத்தில் இருப்பதாகவும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசனம் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருவதாகவும் இவர்கள் இருவரும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை