திருப்பத்தூர் அருகே லாரி மோதி 7 பெண்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
திருப்பத்தூர் அருகே சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பஞ்சராகி நின்றுள்ளது. வேனை சரிசெய்யும் வரை வேனில் இருந்த சில பெண்கள் காற்றோட்டமாக சாலையின் நடுவில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சாலையில் அமர்ந்திருந்த பெண்கள் 7 பேர் பரிதாபமாக நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோர விபத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.