Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முறையான வாக்காளர் பட்டியலே சரியான தேர்தல் களத்தை தீர்மானிக்கும்- அமைச்சர் உதயநிதி

முறையான வாக்காளர் பட்டியலே சரியான தேர்தல் களத்தை தீர்மானிக்கும்-  அமைச்சர் உதயநிதி
, சனி, 30 செப்டம்பர் 2023 (17:28 IST)
நமது நாட்டில் அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக, தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும், காங்கிரஸ், திமுக, தி.காங்., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியும் அமைந்துள்ளன.

இந்த  நிலையில், திமுகவினர் தேர்தல் பயிற்சிப் பாசறை நடத்தி திமுக தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், INDIA- வின் வெற்றிக்கான பணியை வாக்களார் பட்டியல் சரி பார்ப்பில் இருந்து தொடங்குவோம் என்று  அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

 
‘’வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடெங்கும் வருகிற நவம்பர் 4,5 & 18,19 தேதிகளில் நடைபெறவுள்ளன.

முறையான வாக்காளர் பட்டியலே சரியான தேர்தல் களத்தை தீர்மானிக்கும். எனவே, கழக இளைஞரணி நிர்வாகிகள் - தம்பிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறுகிற முகாம்களில் பங்கேற்று, பாக முகவர்களுடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தம் செய்தல், இறந்தோர் பெயரை நீக்குதல்  உள்ளிட்டப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே மிக முக்கியமான 2024 மக்களவைத் தேர்தலில், #INDIA- வின் வெற்றிக்கான பணியை வாக்களார் பட்டியல் சரி பார்ப்பில் இருந்து தொடங்குவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு