Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சிறையில் பதட்டம்’ - பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலை முயற்சி!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (08:29 IST)
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


 
இதில், சாந்தன், செல்வம், மதுரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக 1வது பிளாக்கில் உள்ளார். பேரறிவாளன் மற்றூம் முருகன் 2வது பிளாக்கில் உள்ளனர். பேரறிவாளனுக்கும், ராஜேஷ்கண்ணாவுக்கும் பிளாக்கில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறைகாவலர் பாலமுருகன், உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள பிளாக்கை திறந்துவிட்டுள்ளார். அப்போது, சிறை வளாகத்திற்கு வந்த ராஜேஷ்கண்ணா, பேரறிவாளனின் அறைக்கு சென்று அவரை எழுப்பி, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில், பேரறிவாளன் கை மற்றும் தலையில், பலத்த காயமடைந்தது. அதனால், அவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது.

இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ்கண்ணா ஏற்கனவே பயன்படுத்தி வந்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மயக்கம் அடைந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து, ராஜேஷ்கண்ணாவின் சிறை சலுகைகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments