Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசி கறி கேட்டு அராஜகம் செய்த போலீஸ்காரர்: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (10:39 IST)
சேலத்தில் இலவசமாக கறி தராத ஆத்திரத்தில் போலீஸ்காரர் ஒருவர் கறிக்கடைகாரரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த மூக்குத்தி கவுண்டர் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரது மனைவியும் மகனும் கடையை கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று மூக்குத்தி கவுண்டர் கடைக்கு வந்த காவல் அதிகாரி ஒருவர், அவரிடம் இலவசமாக கறி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஃப்ரீயால்லாம் தர முடியாது காசு கொடுங்கள் தருகிறேன் என மூக்குத்தி கவுண்டர் கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த காவலர் பாலசுப்ரமணியம், மூக்குத்தி கவுண்டரின் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
இதனையடுத்து மூக்குத்தி கவுண்டர் தனக்கு நேர்ந்த அவலங்களை மாவட்ட காவல் ஆணையரிடம் கூறினார். உடனடியாக காவலர் பாலசுப்ரமணியம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் மூக்குத்தி கவுண்டரிடம் சென்ற காவலர் பாலசுப்ரமணியம், அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments