Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்.. என்ன காரணம்?

Advertiesment
நடிகர் விஜய் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்.. என்ன காரணம்?

Mahendran

, சனி, 20 ஏப்ரல் 2024 (11:55 IST)
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் விஜய் நேற்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது விதிமீறல் செய்ததாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரியில் நடிகர் விஜய் நேற்று வாக்களிக்க வந்தபோது விதிமுறைகளை மீறி 200க்கும் மேற்பட்டவர்களுடன் வந்ததாகவும் அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 
 
இந்த மனு மீது விசாரணை நடந்து வருவதாகவும் இந்த மனுவில் உண்மை தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து..! என்ன காரணம் தெரியுமா..?