Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில அதிகரித்து வரும் போலீஸ்காரர்களின் தற்கொலைகள்

Advertiesment
தமிழகத்தில அதிகரித்து வரும் போலீஸ்காரர்களின் தற்கொலைகள்
, செவ்வாய், 5 ஜூன் 2018 (12:20 IST)
தமிழகத்தில் போலீஸ்காரர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் வேளையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலீஸ்காரர்களின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேலை பளு, குடும்ப பிரச்சனைகள், மேலதிகாரிகளின் தொல்லை என பல்வேறு காரணக்களுக்காக போலீஸ்காரர்கள் தற்கொலைகள் செய்துகொள்கின்றனர். 
 
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த சுகுமாறன்(29) சிறப்புப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த சுகுமாறன் திடீரென்று வீட்டு மாடியில் இருந்து குதித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சுகுமாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
webdunia
போலீஸார் நடத்திய விசாரணையில், சுகுமாறன், குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சரான 3 டயர்களுடன் ஓடுகிறது இந்திய பொருளாதாரம்: ப.சிதம்பரம் காட்டம்!