பிளாட்பாரத்தில் மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு: சென்னையில் பயங்கரம்

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (13:13 IST)
சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்ணை ஒரு காமக்கொடூரன் கற்பழித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் மணிகண்டன் - விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். விஜயலட்சுமி ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்தவர் ஆவார்.
 
இந்நிலையில் நேற்று தம்பதியினர் இருவரும் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மனித மிருகம் ஒன்று, மாற்றுத்திறனாளி பெண் என்றும் பாராமல் விஜயலட்சுமியை கற்பழிக்க முயன்றுள்ளான். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனையும் அந்த மனித மிருகம் கடுமையாக தாக்கியுள்ளது.
 
பின்னர் விஜயலட்சுமியை ஒரு முட்புதரினுள் வைத்து சீரழித்துள்ளான் அந்த காமக்கொடூரன். இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மனைவியை இழந்த விஜயகுமார், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈவு இரக்கமின்றி இந்த கொடூரத்தை செய்த அயோக்கியனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மணிகண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments