Publish Date: Wed, 02 Aug 2023 (11:44 IST)
Updated Date: Wed, 02 Aug 2023 (11:46 IST)
சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமரியாதை செய்ததை அடுத்து சிலை அருகே அதிமுகவினர் பெரும் கூட்டமாக கூடி வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றி உள்ளனர். எம்.ஜி.ஆர் சிலையின் முகத்தில் சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு உள்ளதை அடுத்து அந்த சிலை அவமரியாதை செய்யப்பட்டதாக அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் கருதி உள்ளனர்
இதனால் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள சிலை அருகே அதிமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.