வட்டிக்கு பணம் கொடுத்து மாட்டிக்கொண்டோம்: குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட முதியவர்!!!

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (13:24 IST)
கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க முடியாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சிவராமன்(77). இவரது மனைவி புஷ்பா (66). இவர்களுக்கு பாபு (42) என்ற மகன் உள்ளார். பாபுவிற்கு கண்பார்வை தெரியாததால் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் சிவராமன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 5 லட்சம் ரூபாயை அதே பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு வட்டிக்கு கொடுத்துள்ளார். கிடைக்கும் வட்டிப்பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார் சிவராமன். மாதாமாதம் வட்டி கொடுத்து வந்த நபர் சில மாதங்களாக வட்டியை கொடுக்கவில்லை.
 
இதுகுறித்து சிவராமன் அந்த நபரிடம் கேட்ட போது அவர் சிவராமனை மிரட்டியுள்ளார். ஏற்கனவே தனது மகனுக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த சிவராமன், கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றுகிறார்கள் என்ற ஏக்கத்தில் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments