Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதல் விபரீதம்: மாமனார் மாமியாரை ஓட ஓட வெட்டிக் கொன்ற மருமகன்

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (11:08 IST)
மருமகனின் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் மாமனார் மாமியாரை ஓட ஓட கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் முனீஸ்வரி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் கணேசன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது முனீஸ்வரிக்கு தெரியவர இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனாலும் திருந்தாத கணேசன் தொடர்ந்து அந்த பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்.
 
முனீஸ்வரி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் தங்கள் மருமகனை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் தனது தந்தையுடன் சேர்ந்து தனது மாமனார் மாமியாரை ஓட ஓட வெட்டி கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கொலையுண்ட இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணேசனையும் அவரது தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments