Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரினா கடற்கரையில் 80,000 சதுரஅடியில் சுதந்திர தின அருங்காட்சியகம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

assembly

Mahendran

, சனி, 27 ஏப்ரல் 2024 (08:00 IST)
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது என்றும், இந்த அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை  வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் கையெழுத்து பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள்,  இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில்  இடம்பெறும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
 
75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்  என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம்  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்.! பெண் தோழியுடன் வாலிபர் கைது..!!