Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசை ஆசையாக பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்..! விபத்தில் சிக்கி பலியான மகன்..!!

Advertiesment
accident

Senthil Velan

, சனி, 17 பிப்ரவரி 2024 (12:40 IST)
காரைக்குடியில் பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்கில் வேகமாக சென்ற மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன்  சபரி (வயது 19) விலை உயர்ந்த பைக் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார்.
 
மகனின் ஆசைப்படி கடந்த வாரம் R15 பைக் வாங்கி கொடுத்துள்ளார்.  புதிய பைக்கை எடுத்துக் கொண்டு  சபரி தனது நண்பர்  குமார் (வயது 18) ஏற்றிக் கொண்டு காரைக்குடி அருகே  மாத்தூரில் இருந்து இலுப்பக்குடி செல்லும் சாலையில்  அதிவேகமாக சென்றார்.

அப்போது வளைவில் திரும்பும்போது கட்டுபாட்டை இழந்த பைக், தடுப்பு சுவரில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே சபரி உயிரிழந்தார்.  
 
தலையில் பலத்த காயமடைந்த குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்த விபத்துக் குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்கில் வேகமாக சென்று மகன் பலியான சம்பவம் காரைக்குடியில் பெண் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது..! ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க பொன்ராஜ் வலியுறுத்தல்.!!