Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை கடத்தல் - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (12:09 IST)
குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் ஆப்பில் தவறான தகவலை பதிவிட்ட வீரராகவன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி  பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மனநோயாளி ஒருவரை குழந்தை திருடன் எனக் கருதி மக்கள் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். அதேபோல் கடலூரில் ஒரு பெண் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பிய, திருவண்ணாமலை புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments