Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணி மேல் ஆசைப்பட்ட தம்பி: நடந்து முடிந்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (20:29 IST)
தனது அண்ணன் மனைவியோடு தகாத உறவில் இருந்த ஒருவர், கடைசியாக அண்ணியையே குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வசிப்பவர் மணிகண்டன். திருமணமான இவருக்கு தனது அண்ணன் மனைவியோடு பழக்கம் இருந்துள்ளது. அண்ணன் இறந்துவிட்ட நிலையில் தனது இரண்டு குழந்தைகளோடு கிண்டியில் வசித்து வருகிறார் அவரது அண்ணி பானுப்பிரியா. கணவர் இல்லாததால் தனது மைத்துனரோடு தகாத உறவில் இருந்து வந்துள்ளார் பானுப்பிரியா. இதனால் மணிகண்டன் தனது அண்ணியை பார்க்க அடிக்கடி கிண்டிக்கு வந்து போவார்.

இந்நிலையில் பானுப்பிரியாவுக்கும் வேறொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணிகண்டனோடு பேசுவதை குறைத்து கொண்டுள்ளார். இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரிய வந்திருக்கிறது. இன்று காலை கிண்டியில் உள்ள அண்ணி வீட்டுக்கு சென்ற மணிகண்டன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். வலியில் துடித்து கத்தியுள்ளார் பானுப்பிரியா.

அவரது கதறலை கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து மணிகண்டனை பிடித்தனர். பானுப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments