Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்.. சீக்கிரம் வாம்மா! – மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (18:00 IST)
தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளி மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தவரை பொதுமக்கள் அடித்து துவைத்தனர்.

குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவியின் பள்ளிக்கு சென்ற வினோத் என்பவர் மாணவியின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகவும், உடனடியாக மாணவியை அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மாணவியை அழைத்து சென்ற அவர் அங்குள்ள ஒரு ஓடை பகுதிக்கு மாணவியை பலவந்தமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்குள் மாணவியை நபர் ஒருவர் அழைத்து சென்ற விவகாரம் பள்ளி நிர்வாகம் மூலமாக மாணவியின் தந்தைக்கு தெரிய வர ஊர் மக்கள் பல பகுதிகளிலும் தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது ஓடை பகுதியில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்கவே அங்கு சென்ற பொதுமக்கள் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டுள்ளனர். மேலும் தனது நண்பரின் பெண் என்றும் பாராமல் பாலியல் கொடுமை செய்ய முயன்ற வினோத்தை அடித்து துவைத்து போலீஸில் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்துள்ளனர். பள்ளியில் இருந்த மாணவியை போலி காரணம் சொல்லி அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்