தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழக மாவட்டங்கள் அதிகமான மழைப் பொழிவை வடகிழக்கு பருவமழையில் பெறுகின்றன.
இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரை பகுதிகள் அருகே வரும் ஜூலை 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது படிப்படியாக மேலும் உயர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K