Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

Prasanth K
சனி, 21 ஜூன் 2025 (10:05 IST)

கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டம் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறாக பணிபுரிந்து வந்த தம்பதியர் ஒருவரின் 6 வயது குழந்தை ரோஷினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, தாய் கண் முன்னே ரோஷினியை கவ்விக் கொண்டு சென்றது.

 

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் அருகாமை பகுதிகளில் சிறுத்தை இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினரும், காவல் துறையினரும் சிறுமியின் உடலை தேடும் பணியிலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாய் கண் முன்னே குழந்தை சிறுத்தைக்கு இரையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments