உல்லாசத்திற்கு மறுத்த பெண் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
, புதன், 5 ஜூலை 2017 (11:28 IST)
உல்லாசத்திற்கு மறுத்த தனது கள்ளக்காதலியை ஒரு நபர் வெட்டிக்கொன்ற விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை என்ற இடத்தில் ஒரு பள்ளி சிறுவர்கள் தங்கும் ஒரு விடுதியில் பணிபுரிந்து வந்த ஆனந்தி(38) என்ற பெண் நேற்று அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவணை இழந்த ஆனந்தி தனது இரு மகன்களுடன் அந்த விடுதியிலேயே தங்கி வேலை செய்து வந்தார். அப்போதுதான் இந்த கொலை நடந்துள்ளது.
போலீசார் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த செல்லப்பா(50) என்பவரோடு ஆனந்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். ஆனால், பேட்டையில் உள்ள விடுதிக்கு சென்ற பின், ஆனந்தி, செல்லப்பாவோடு தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டார்.
சம்பவத்தன்று சிறுவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்ற பென் அந்த விடுதிக்கு சென்ற செல்லப்பா, ஆனந்தியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், ஆனந்தி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் பல முறை கெஞ்சியும் ஆனந்தி சம்மதிக்கவில்லை. இதில் இருவக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த செல்லப்பா அங்கிருந்த அரிவாளை எடுத்து ஆனந்தியை சராமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இது அனைத்தையும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்லப்பா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்