Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவுப்பணியில் இருந்த பெண் காவலருக்கு ராணுவ வீரர் கொடுத்த பாலியல் தொல்லை

Webdunia
வியாழன், 3 மே 2018 (08:59 IST)
நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல்நிலையத்தில் இரவுப்பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு காவல்நிலையத்தின் தொலைபேசியில் தினமும் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசி வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக இரவுப்பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு தினமும் நள்ளிரவில் தொலைபேசி மூலம் நாக்கூசும் வகையில் ஆபாசமாக மர்ம நபர் ஒருவர் பேசி வந்துள்ளார். பெண் காவலர் இணைப்பை துண்டித்தாலும் மீண்டும் மீண்டும் அந்த நபர் ஆபாச பேச்சை தொடர்ந்துள்ளார்.
 
தினமும் அந்த மர்ம நபர் தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அந்த பெண் காவலர் ராதாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையில் இறங்கியபோது, ஆபாசமாக பேசிய அந்த மர்ம நபர் ஒரு ராணுவ வீரர் என்பதும், காஷ்மீர் பகுதியில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் அவர் அங்கிருந்தே பெண் காவலருடன் ஆபாசமாக பேசியதும் தெரியவந்துள்ளது. ஒரு ராணுவ வீரரே பெண் காவலரிடம் ஆபாசமாக பேசியதால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்