Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியில் செல்வன்- வந்தியத் தேவன் பாதையில் ஒரு பயணம் !

ponniyin selvan- kalki jouney
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (21:19 IST)
கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு வந்தியத்தேவன் சென்ற ராஜபாட்டையில் மக்கள் பயணித்து, அவற்றைக் கண்டு களித்து, சரித்திர நிகழ்வுகளை அப்போதைக்கு அப்போதே அனுபவித்து மகிழ வேண்டும் என்கிற எண்ணத்தில் கல்கி குழுமம் காணொளித் தொடர் ஒன்றை வெளியிட உள்ளது. அந்த அனுபவப் பயணத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி, 2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்  வெளியிடப்பட்டது.
 
கல்கி வார இதழில் 1950ல் அமரர் கல்கி அவர்களால் தொடங்கப்பட்ட, ‘பொன்னியின் செல்வன்’, இன்று அகண்ட காவிரியாகப் பாய்ந்து, ஆகாச கங்கையாகப் பொங்கிப் பெருகிப் பிரவாகிக்கிறது. பலரும் தத்தம் கண்ணோட்டத்தில், இந்த சரித்திரக் காவியத்தை அணுகினாலும், அமரர் கல்கியின் பார்வையில் இருந்து தடம் புரளாமல், கல்கி குழுமம் இந்த படப்பிடிப்பை மிகுந்த கவனத்துடன் தயாரித்துள்ளது.
 
வரலாற்று நூல் விரும்பிகளின் கனவு தொழிற்சாலையான பொன்னியின் செல்வன்,  ஒவ்வொருவரின் விருப்பு நூல், என்பதால், அனைவரையும் கவரும் விதத்திலும், சிந்திக்க வைக்கும் வகையிலும், 30 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 4 மணி நேர தயாரிப்பானது,  15 வீடியோ தொகுப்புகளாக வெளியிடப்பட  உள்ளன. 
 
உலகளாவி திரண்டிருக்கும், ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்களை ஒன்றுதிரட்டி, கால யந்திரத்தில் அவர்களைக் கூட்டிச் சென்று, சோழர் சரித்திரத்தை நுகரச் செய்வதே  இம்முயற்சியின் நோக்கம். 
 
ஒன்பது நாட்கள், பத்து மாவட்டங்கள், எட்டு முக்கிய நகரங்கள், 50 க்கும் மேற்பட்ட இடங்கள் என அமையும் இப்பயணம், பொன்னியின் செல்வன் தொடங்கும் வீராணம் ஏரியில் தொடங்கி, திருகடல்மல்லை என்கிற மாமல்லபுரத்தில் நிறைவடையும்.
 
உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இன்று முதல் இந்தப் பிரயாணத்திற்கான பதிவினை செய்துக்கொள்ளலாம். கல்கி குழுமம் வெளியிடவிருக்கும் இந்தக் காணொளித் தொடர்களே அவர்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். 
 
வரலாற்றின் மீதுள்ள உண்மையான நேசத்துடனும், ஆர்வத்துடனும்,ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் இந்தப் பயணத் தொகுப்பை வழங்கி, தானே அதை வழிநடத்தியும் செல்கிறார், பத்திரிகையாளரும், சரித்திர நாவலாசிரியருமான 'காலச்சக்கரம்' நரசிம்மா என்கிற டி.ஏ. நரசிம்மன். ஆங்காங்கே ஊர்களின் பெயருக்கான காரணத்தையும், மருவி போன பெயர்களையும், அதிகம் அறியப்படாத சுவாரஸ்ய தகவல்களையும் குறிப்பிட்டு, இந்தப் பயணத்தை சுவாரசியப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 
 
Busiupadvt  நிறுவனத்தைச் சார்ந்த  ராஜ்கமல் தனது குழுவினருடன், மிகுந்த உற்சாகத்தோடு  சரித்திரப் புகழ் மிக்க இந்தத் தலங்களை  சுற்றி வந்து, கண்கவர் காமெரா காட்சிகளை படம் பிடித்துள்ளார். 
 
தமது ஓவியங்கள் வாயிலாக இறைப்பணி செய்துவரும் பத்மவாசனின் ஓவியங்கள் இந்தத் தயாரிப்பில் சேர்க்கப்பட்டு  பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது. 
 
இந்த வரலாற்றுப் புகழ் மிக்க அனுபவப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துத் தர முன்வந்துள்ளனர் Parry Travels நிறுவனத்தார்.
 
இந்த பிரம்மாண்ட தயாரிப்பிற்கு கல்கி குழுமத்துடன் கைக்கோர்த்து, பக்கபலமாக, உறுதுணையாகவும் இணைகின்றனர் பெருமை மிகு ராம்ராஜ் காட்டன், சக்தி மசாலா மற்றும் சிட்டி யூனியன் பேங்க் நிறுவனத்தினர். 
 
இந்த அனுபவப் பயணத்தின் தயாரிப்பிற்கு உதவிய, அகில இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, இந்து சமய,அறநிலையத்துறை, கோவில் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள்,  ஊடக நண்பர்கள், விளம்பரதாரர்கள், பொது மக்கள்  அனைவருக்கும் கல்கி குழுமம் தனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.
 
சரித்திரம், இலக்கியம், பயணம் என்ற முப்பரிமாண தயாரிப்பு குறித்த விரிவான செய்திகளை www.kalkionline.com என்ற கல்கி குழும இணையதளத்தில் கண்டுகளிக்கலாம்.
 
அனுபவப் பயணத்திற்கான பதிவுகள் தொடங்கிவிட்டன. Bookings are open from August 3rd 2022 for this heritage tour. செப்டெம்பர் 10, 2022 க்கு முன்பாக பதிவு செய்தால் பயணக் கட்டணத்தில் 10% தள்ளுபடி பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.kalkionline.com என்ற இணையதளத்தை அணுகலாம். 73059 15554 எண்ணிலும் அழைத்து அறியலாம்.
 
இந்த நான்கு மணி நேர பிரம்மாண்ட தயாரிப்பான 15 வீடியோ தொகுப்பின் வெளியீட்டு விழா செப்டம்பர் 24, 2022,  சனிக்கிழமை அன்று நடைபெறும். அதன் பிறகு காணொளிகள் கல்கி ஆன்லைன் யூடியூப் சேனல் வழியாக தொடர்ந்து வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சந்திப்புக் குறித்தும் கல்கி குழுமம் வழங்கவிருக்கும் ’உள்ளங்கையில் பிரம்மாண்டம்’ முயற்சி குறித்தும், வந்தியத்தேவன் பாதையில் அமையவிருக்கும் ‘பராக்! பராக்!’  பயண ஏற்பாடுகள் குறித்தும் தத்தம் மேதகு ஊடகத்தில் செய்திகளை வெளியிட்டு, கூடவே  www.kalkionline.com  என்ற கல்கி குழும இணைய முகவரியையும் குறிப்பிடும்படி ஊடக நண்பர்களிடம் இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தனது இயலாமையை மறைக்க பாஜக மீது பழி போடுகிறது: அண்ணாமலை