Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Advertiesment
karur
, சனி, 18 மார்ச் 2023 (23:34 IST)
கரூரில், 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை கலைதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
 
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பள்ளி கல்வித்துறை ஆணையர் பணியிடத்தின் ரத்து செய்து பழைய நிலையில் ஆன பதவி உயர்வு வழி பள்ளி கல்வி இயக்குனர் பணியிடம் தொடர்பு சிதற வேண்டும் மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்த பின் அனுமதிக்காக காத்திருக்கும் 6500 ஆசிரியர்களுக்கு பின்னேர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விபத்து....விமானிகளை தேடும் பணி தீவிரம்