ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

Prasanth Karthick
திங்கள், 2 ஜூன் 2025 (09:50 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாணவிக்காக மட்டும் ஒரு பள்ளி செயல்பட்டு வரும் செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் சென்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரே ஒரு சிறுமி மட்டும் படித்து வருகிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சிறுவன் ஒருவன் 5ம் வகுப்பிலும், சிறுமி ஒருவர் 2ம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். சிறுவன் 5ம் வகுப்பு முடித்த நிலையில் அடுத்த பள்ளிக்கு மாறுகிறார். பள்ளி தலைமை ஆசிரியரும் சில மாதங்கள் முன்னதாக ஓய்வு பெற்று விட்டார். 

 

இதனால் பள்ளி மூடப்படும் அபாயம் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments