Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்லது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசுப்பேருந்து நடத்துனர்

நல்லது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசுப்பேருந்து நடத்துனர்
, செவ்வாய், 19 ஜூன் 2018 (11:41 IST)
ஈரோட்டில் அரசுப்பேருந்து நடத்துனர் ஒருவர் இந்தியில் பெயர்ப்பலகை வைத்த காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி - பெருந்துறை சிப்காட் இடையேயான அரசு டவுன் பஸ்சில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்ய செய்த காரியம் அவருக்கே பாதகமாய் அமைந்துள்ளது.
 
கவுந்தப்பாடி - பெருந்துறை சிப்காட் ரூட்டில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் பேருந்தில் பயணிப்பதால் அவர்களுக்கு புரியும் விதத்தில் இந்தியில் பெயர்ப்பலகையை வைத்துள்ளார். கவுந்தப்பாடி - பெருந்துறை என்று தமிழில் இருந்த பெயரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாற்றியமைத்துள்ளார்.
 
இதனையறிந்த மேலதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்தனர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் காரணத்திற்காக நடத்துனர் இப்படி செய்திருந்தாலும் கூட, போக்குவரத்துக்கழகம் அளித்த பெயர்ப்பலகையையே உபயோககப்படுத்த வேண்டும். அதுவே விதிமுறை என அதிகாரிகள் தெரிவித்தனர். நல்லெண்ண அடிப்படையில் நடத்துனர் செய்த காரியம் அவருக்கு பாதகமாய் அமைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதியின் அடுத்த படம் இதுதான்...